திங்கள், 16 டிசம்பர், 2013

akaramuthala அகரமுதல இணைய இதழ் 5 தலைப்புகள் சில



காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  ...

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

அசித்தர் கைபேசி - 9382719282     தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அசித்தர் குறிப்படம் அக்ரூட்                           -               உருப்பருப்பு, படகரு அங்குட்டம்                  -              பெருவிரலளவு அசோகு                         -              பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம்        -              கோழி முட்டை நெய்மம் அண்டவாதம்              -             விரையழற்சி ...

தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று ...

தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
இ. படைமாட்சி  படைமாட்சி - படையினது பெருமை. ஒரு நாட்டாட்சி நன்கு நடைபெறவும், நாட்டில் வாழ்வோர் அச்சமின்றித் தத்தம் கடனை ஆற்றவும் படை மிகமிக இன்றியமையாததாகும். அருள்நெறியில் ஆட்சி புரிவதாகக் கூறும் நாட்டுக்கும் படை இன்றியமையாதது. மக்களுக்குய தீக்குணங்களாம் பொறாமை, செருக்கு, பெருவிருப்பம், பிறரை ஆட்படுத்தும் எண்ணம் முதலியன ஒழியும்வரை படை வேண்டற்பாலதே. ...

சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு  அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க வேண்டும் மரு.இராமதாசு


 சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப்  பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும்  சிற்றிந்தியா (லிட்டில் இந்தியா) பகுதியில் நிகழ்ந்த சாலை  நேர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்றிந்தியா பகுதியில் ..

தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது


- செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் .

மாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்! இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்! என் மகளைப் பிரிந்த யானோ? - தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். ...

தங்கநங்கை அம்ரிதாவிற்குப் பாராட்டுகள்!


அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில்  நெசவுத்தொழில்நுட்ப இளம்பொறியியலில் (B.Tech - Textile Technoloy) செல்வி அம்ரிதா முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். அண்மையப் பட்டமளிப்பு விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்றது. பெற்றோர் திருவாளர்கள் சி.மனோகரன்கசுதூரி, தமக்கை மரு.சந்தனா, சுற்றத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுடன் இணைந்து நிறைநலமும் உயர்புகழும் பெற அகரமுதல இணைய இதழும்வாழ்த்துகிறது!

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5


(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ...


புதிது புதிதாய் சிந்தனை செய்


                                                                                                  -கல்வியாளர் வெற்றிச்செழியன்
புதிது புதிதாய் சிந்தனை செய் - நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் - நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி                                                                                                 புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, ...

மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது

மானாமதுரை: இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாதமி' சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம்  உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக