செவ்வாய், 4 ஜூன், 2013

வீணாகும் ஆற்றலைப் பயன்படுத்தினேன்!

வீணாகும் ஆற்றலை ப்  பயன்படுத்தினேன்!

வாகனங்கள், தடை மேட்டில் ( "ஸ்பீட் பிரேக்கரில்') ஏறி இறங்குவதில் வீணாகும் ஆற்றலில், நீர் இறைக்கும் முறையை கண்டறிந்த, முகமது ரிஸ்வான்: நான், நாகப்பட்டினம் மாவட்டத்தின், ஈ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் படிக்கிறேன். நான்குவழிச் சாலைகளில் உள்ள, "டோல்கேட் பிளாசா' எனும் சுங்கச்சாவடிகளில், வாகனங்களில் வருவோரிடம் வரி வாங்குவதற்காக, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், 20க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அமைத்திருக்கின்றனர்.

இவ்வேகத்தடைகளில், எந்நேரமும் வாகனங்கள் ஏறி இறங்கும் அழுத்தத்தால், ஆற்றல் வீணாக்கப்படுகிறது. இதை தடுத்து, நன்கு பயன்படுத்த சிந்தித்தேன். நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் சிறுவர்கள் விளையாடும், "சீசா' விளையாட்டை கவனித்தேன். ஒரு முனையில் குழந்தை கீழாக அழுத்தும் போது, எதிர் முனையில் உள்ள குழந்தை, மேல் நோக்கி எழுவதை கவனித்தேன்.
இதை அடிப்படையாக வைத்து, சுங்கச்சாவடிகளில் அமைந்துள்ள வேகத்தடைகளை, தார் மூலம் அமைக்காமல், ரப்பர் மூலம் அமைத்து, அதன் கீழ் ஒரு அடி ஆழத்தில், "ஸ்பிரிங்' போன்ற அமைப்பையும், அதன் அருகில் சாதாரண நீர் இறைக்கும் பம்ப்பையும், முதல் வகை நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் இணைக்க வேண்டும்.

வேகத்தடைகளின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது கிடைக்கும் அழுத்தத்தினால், ஸ்பிரிங் கீழ் நோக்கி தள்ளப்படும். "ராக் அண்ட் பினியன்' முறை மூலம், ஸ்பிரிங்கிற்கு கிடைக்கும் நேர் இயக்குவிசை, சுழற்று இயக்குவிசையாக மாற்றப்பட்டு, அருகில் இருக்கும் நீர் இறைக்கும் பம்பு இயங்க துவங்கும். இத்தொழில்நுட்பம் மூலம், 20 அடி ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சி, 20 அடி உயரத்தில் உள்ள தொட்டிக்கு, நீர் ஏற்றலாம்.

எதிரே வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தை குறைக்க, சென்டர் மீடியனில் வைக்கப்படும் செடிகளுக்கு தேவையான நீரை, மின்சாரம் இல்லாமல் இதன் மூலமே பெறலாம். இக்கருவி தயாரிக்க, 1,500 ரூபாய் தான் செலவாகும். தொடர்புக்கு: 81244 43835.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக