வியாழன், 24 ஜனவரி, 2013

கோழி வளர்க்க வேண்டுமா? பயிற்சி உண்டு!


சொல்கிறார்கள்

கோழி வளர்க்க வேண்டுமா? பயிற்சி உண்டு!

புதுக்கோட்டை, கால்நடை அறிவியல் பல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய பேராசிரியர், பி.என். ரிச்சர்ட் ஜெகதீசன்: இந்திய கால்நடை உற்பத்தியின் பெரும்பகுதி, கிராமங்களை கொண்டது. நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம், சராசரி வருமான உயர்வு காரணமாக, கால்நடை உற்பத்தி பொருட் களான இறைச்சி, பால், முட்டை போன்றவற்றின் தேவை, அதிகரித்து வருகிறது. பொருட்களுக்கான தேவையை ஈடுகட்ட, அதிநவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற, தேவையான மனித வளத்தை வளர்க்க வேண்டும். இந்த நோக்கோடு, தமிழகத்திலேயே முதன் முறையாக இந்திய அரசின் தேசிய வேளாண் அபி விருத்தித் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. இம்மையத்தில், 12 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குகிறோம். குறிப்பாக, செயற்கை முறை கருவூட்டல், கால்நடை, கோழிகளுக்கான தடுப்பூசி போடுதல், தீவன புல் உற்பத்தி, குஞ்சு பொரிப்பக மேலாண்மை.அறிவியல் முறைப்படி வெள்ளாடு, வெண்பன்றி வளர்த்தல், கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை, வான்கோழி மேலாண்மை, சுகாதாரமான பால் உற்பத்தி, மதிப்பூட்டிய இறைச்சி, பால் பொருட்கள் தயாரித்தல் என, தேர்ந்தெடுத்த கிராமங்களில், மூன்று மாத இலவச பயிற்சியை, செயல்முறை விளக்கத்தோடு வழங்குகிறோம். வான்கோழி, 5 கிலோ தீவனத்திற்கு, 1 கிலோ எடை அதிகரிக்கும். மேய்ச்சலின் மூலம் தீவன செலவை குறைக்கலாம். கோழி முட்டைகளை அடை வைப்பதற்கு முன், கழுவும் பழக்கத்தால், 8,000 நுண்ணிய துளைகள் மூலம் நீர் உள்ளே சென்று, கெட்டு விடுகிறது. சேவலுடன் இணைவதால், உருவாகும் முட்டை மட்டுமே, குஞ்சு பொரிக்கும். ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும், நன்கு பயிற்சியளிக்கிறோம். தொடர்புக்கு: 04322-271443.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக