ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஒரு முழம் மல்லிகை100 உரூபாய்

ஒரு முழம் மல்லிகை100 உரூபாய்

திருப்பூர்:வரத்து சரிவடைந்துள்ளதால், திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை கிலோ 500 ரூபாயாகி உள்ளது.திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து டன் வரை வரத்து இருந்ததால், இரு மாதத்துக்கு முன்பு வரை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடும் பனிப்பொழிவு காரணமாக, பூ உதிர்தல், அழுகி வீணாவது அதிகரித்ததால், கடந்த டிச., முதல் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து படிப்படியாக குறையத்துவங்கியது. தற்போது மார்க்கெட்டுக்கு, 500 கிலோ மட்டுமே வரத்தாக உள்ளது. அதனால், ஒரு கிலோ மல்லிகை 500 ரூபாயாக அதிகரித்துள் ளது. வழக்கமாக 15 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு முழம் மல்லிகை, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக