ஒரு குடும்பத்தில் 2 அடி உயரத் தமையன் தம்பியர் : உதவித்தொகை கோரி "கடைக்குட்டி' விண்ணப்பம்
இராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒரு குடும்பத்தில் பிறந்த 3
சகோதரர்களும் 2 அடி உயரமே உள்ளனர். இவர்களில் இளையவர் வாழ உதவித்தொகை கோரி
கலெக்டரிடம் மனு அளித்தார். திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் காதர்கனி, 47.
இவர் இரண்டு அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார்.
வழியின்றி
தவிப்பதால், அரசு உதவித்தொகை கோரி ராமநாதபுரம் கலெக்டர் நந்தக்குமாரிடம்
மனு கொடுத்தார். இவர் கூறியதாவது: தந்தை ரபீக், 79. தாயார் இபுராஹிம்மா
சமீபத்தில் இறந்துவிட்டார். உடன் பிறந்த இரு சகோதாரர்களும் இரண்டு அடி
உயரமே உள்ளனர். மூத்தவர் சீனி உம்மர், 58, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு சகோதரர் நாகூர்கனி பிச்சை எடுக்கிறார்.
நான், பெரியம்மா மகள் வீட்டில் தங்கி உள்ளேன். என்னால், எந்த வேலையும்
செய்ய முடியாது. உதவிக்கு ஆள் தேவை. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
இருக்கிறது. வாழ வழியின்றி உள்ளதால் அரசின் உதவித்தொகை கோரி மூன்று முறை
கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போதும் மனு
கொடுத்துள்ளேன், என்றார்.
கலெக்டர் நந்தக்குமார்
கூறியதாவது: குறை தீர் கூட்டத்தின்போது, நானும் டி.ஆர்.ஓ., விஸ்வநாதன்
இருவரும் மனுக்களை வாங்கினோம். காதர்கனி மனு குறித்து எனது கவனத்திற்கு
வரவில்லை. இருப்பினும், அவரது மனு குறித்து விசாரணை நடத்தி உரிய உதவிகள்
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக