வியாழன், 5 ஜூலை, 2012

சமையலும் நல்ல தொழில் தான்'"சமையலும் நல்ல தொழில் தான்'

வீட்டிலிருந்தபடியே சிங்கப்பூர், மலேசிய உணவு வகைகளை தயாரித்து, விற்பனை செய்யும் அனார்கலி பேகம்: நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில்; திருமணமானதும் அங்கு தான். 10 ஆண்டுக்கு முன், கணவர், குழந்தைகளுடன் சென்னை வந்து செட்டிலானேன். அங்கு, பள்ளியில் படிக்கும் போது, உணவு மற்றும் ஊட்டச்சத்து வகுப்பில், பல வகையான, "பேக்கிங்' வகைகளை செய்யக் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டதை அவ்வப் போது, வீட்டில் செய்து தருவேன். உறவினர்கள் உட்பட, அனைவரும் பாராட்டுவர்.சென்னை வந்த பின், இங்கு உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்தேன். இங்கு, சிங்கப்பூர், மலேசிய உணவு வகைகள், அதன் உண்மையான சுவையில் கிடைப்பதில்லை என்பது தெரிந்தது. அதனால், நான் அந்தந்த உணவு வகைகளை, அதன் உண்மையான சுவையில் செய்தேன். அது பிடித்துப் போய், பலரும் என்னை மீண்டும் செய்து தரும்படி கேட்க ஆரம்பித்தனர்.என்னை அறியாமலேயே, இது ஒரு தொழிலாக மாறிவிட்டது. விரும்பிக் கேட்பவர்களுக்கு, கேக், சாக்லெட், பப்ஸ் போன்ற, பல வகையான உணவுகளை தயாரித்துக் கொடுக்கிறேன். நான் தயாரிப்பதிலேயே மிகவும் சிறப்பானது, ஆரஞ்சு கேக் தான்."பேக்கிங்' வகைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றஆர்வம் உள்ளவர்களுக்கு, வகுப்பும் எடுத்து வருகிறேன்.எப்போதுமே புதுமையான உணவுகளுக்கு, வரவேற்பு உண்டு. அந்த வகையில், பேக்கரி பொருட்களை தயாரித்து விற்பதும், நல்ல தொழில் தான்; ஆனால், இதற்கு நிறைய பொறுமை தேவை.நாம் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளையும், பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும். தரமாகவும், சுத்தமாகவும் பொருட்களை செய்து கொடுத்தால், வாடிக்கையாளர்கள் நம்மை மீண்டும் தேடி வருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக