செவ்வாய், 11 டிசம்பர், 2012

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மக்களைக் காக்க வேண்டும் : இராமதாசு

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மக்களைக் காக்க வேண்டும் : இராமதாசு

மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தி தமிழக அரசு மக்களைக் காக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெற்ற குழந்தையை தாயே நஞ்சு கொடுத்து கொல்வது எத்தனைக் கொடுமையானதோ அதைவிடக் கொடுமையானது மக்களைக் காக்க வேண்டிய அரசே மது விற்பனையைச் செய்வதாகும். தமிழகத்தில் மது விலக்கைக் கொண்டு வர வலியுறுத்தி வரும் 17ம் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த பாமக தீர்மானித்துள்ளது. தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்து, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.
தமிழகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஒரு பகுதியில் உள்ள பெண்களில் 25 சதவீதத்தினர் மனு அளித்தால், அப்பகுதியில் மதுக்கடைகள் மூடப்படும் நடைமுறையை அரசு கொண்டு வர வேண்டும்.
மதுக்கடைகளின் பணி நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மாதத்தோறும் 500 மதுக்கடைகளை மூடி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வரும் 15ம் தேதிக்குள் இதனைச் செய்யாவிட்டால், 17ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக