செவ்வாய், 11 டிசம்பர், 2012

72 மணி நேரம் புகுவிசைவு இல்லாமல் தங்கும் சலுகை : வாய்ப்பளிக்காத சீனா


72 மணி நேரம் புகுவிசைவு இல்லாமல் தங்கும் சலுகை : இந்தியா, பாகிசுதானுக்கு வாய்ப்பளிக்காத சீனா

பீஜிங்: சீனாவில், விசா இல்லாமல், 72 மணி நேரம் தங்குவதற்கு அந்நாட்டு அரசு சலுகை அறிவித்துள்ளது.கம்யூனிஸ்ட் நாடான சீனா, பொருளாதார மேம்பாட்டுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு, பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில், 72 மணி நேரம், விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பீஜிங் நகரில், 72 மணி நேரம் விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தற்போது, ஷாங்காய் நகரிலும் இதே போன்று விசா இல்லாமல் தங்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில், 48 மணி நேரம் தங்குவதற்கு ஏற்கனவே, சலுகை உள்ளது. தற்போது மேலும் ஒரு நாள் கூடுதலாக தங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட, 45 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பட்டியலில், அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக