திங்கள், 10 டிசம்பர், 2012

தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையில் விடுதலை

தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையில் விடுதலை

First Published : 10 December 2012 03:59 PM IST
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை திரிகோணமலை மாவட்டம் புல்மேடு கடல் பகுதியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 40 பேரும், திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 10ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலை நீதிபதி, விசாரணை நடத்தியதில் அவர்கள் 40 பேரையும் எல்லைத்தாண்டியது குற்றம் என்று எச்சரித்தும், இனி மேல் இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்தும், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை
கொழும்பு, டிச.10-
 
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டடு வருகிறனர்.
 
கடந்த 3-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 40 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த கோர்ட்டு உத்தரவுப்படி அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 
இந்தநிலையில் 40 மீனவர்களும் இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் தரப்பில் வாதாடிய வக்கீல், தமிழக மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
 
இதையடுத்து 40 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்படட அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக