வெள்ளி, 6 ஏப்ரல், 2012

new harmone to reduce the blood sugar




வாஷிங்டன்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வரபிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. "இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், இன்சுலின் மூலமோ அல்லது மாற்று வகையிலோ இந்த ஹார்மோனை செலுத்தி ரத்தத்தில் சர்க்கரையை கணிசமாக குறைக்க முடியும்' என, விஞ்ஞானி க்ராப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக