திங்கள், 2 ஏப்ரல், 2012

குறைகளைக் கூறியது போல் நிறைகளையும் குறிப்பிட்டு இருக்கலாம். அரசு சார்பில் நடக்கும்  விடுமுறைக்கால முகாம்களில் பங்கேற்றுப் பயனடையலாம். இவற்றால் பயன்பெற்றோர் மிகுதி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சேலம்:
நகர்ப்புறங்களில் புற்றீசல் போல, "சம்மர் கேம்ப்' நடத்தும் பயிற்சி மையங்கள் தோன்றியுள்ளன. இவற்றில் பலவற்றில், உரிய தரம் இல்லாததால்,
பொதுமக்கள் ஏமாற்றம்
அடையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அனைத்து

பள்ளிகளிலும் பொதுத்
தேர்வுகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாளில் இவை முடிவடைந்து, கோடை விடுமுறை துவங்க உள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகளில், ஏப்ரல் 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டு மாத விடுமுறையில், குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிக்க வேண்டுமே என்ற எண்ணம் பல பெற்றோருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு மாத விடுமுறையை உபயோகமாக கழிக்கும் படி, சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பவும் பெரும்பாலானோர் தயாராகிவிட்டனர். இதனால் சில ஆண்டுகளாக கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பயிற்சி மையங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடப்பாண்டு, தற்போது ஏராளமான விளம்பரங்களுடன், நீச்சல், ஓவியப்பயிற்சி,

ஆங்கில பயிற்சி, ஜிம்னாஸ்டிக், கராத்தே, யோகா, பாட்டுபயிற்சி, இசை பயிற்சி, நடன பயிற்சி என, பல்வேறு பயிற்சிகளையும் வழங்கும் சிறப்பு மையங்கள் உருவெடுத்துள்ளன. சில தனியார் பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு தனியாக, 500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தினசரி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை பயிற்சியளிக்கும் இம்மையங்களில், வழங்கப்படும் பயிற்சிகள் உண்மையில், பலன் அளிக்கக்கூடியதா என பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக நீச்சல் அல்லது ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பயிற்சிகளில், அடிப்படை அம்சங்களை மட்டுமே இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ள முடியும். அதன் பின் கல்வியாண்டு துவங்கிய பின், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவதால், இந்த இரண்டு
மாதத்தில் பயின்ற விசயங்களை மாணவ, மாணவியர் எளிதில் மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்து பயிற்சிகளையும், தங்களது குழந்தை கற்றுக்கொள்ள வேண்டும் என, பெற்றோர் நினைப்பதைவிட, குழந்தையின் ஆர்வத்தை புரிந்து, அதில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில், பிராக்டிஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உபயோகமாக இருக்கும்.
நீச்சல் பயிற்சியை தொடர்ந்து வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நீச்சலில் சாம்பியனாக உருவெடுக்கவும் முடியும். ஓவியத்தில் ஆர்வம் இருப்பின் தொடர்ந்து பயிற்சியும்,முயற்சியும் நிச்சயம் ஒரு கலைஞனாக உருவெடுக்க வைக்கும். உரிய நிபுணர்கள் இன்றி, தற்காலிகமாக ஒரு மாதத்துக்கு மட்டும் பயிற்சியளிக்கும், "திடீர்' மையங்களில் சேர்ப்பது குறித்து பெற்றோர் யோசிக்க வேண்டும். ஒரு மாதத்தில் காணாமல் போய்விடும் இம்மையங்களில், தொடர்ந்து பயிற்சி பெறவும் வழியிருக்காது. தரமான நிபுணர்களும் இங்கு இருப்பது சந்தேகமே. எனவே, 15 நாள் அல்லது ஒரு மாத பயிற்சி என, பணத்தை வீணாக்காமல், தொடர்ந்து பயிற்சியளிக்கும் தரமான பயிற்சி மையங்களை நாடுவது பெற்றோரின் பர்ஸூக்கும், குழந்தைகளின் நலனுக்கும் நன்மை தரக்கூடியது.
சேலம்:
நகர்ப்புறங்களில்
புற்றீசல் போல,
"சம்மர் கேம்ப்' நடத்தும்
பயிற்சி மையங்கள்
தோன்றியுள்ளன.
இவற்றில் பலவற்றில்,
உரிய தரம் இல்லாததால்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக