எதைச் சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆவோம்!
இயற்கை மருத்துவ நிபுணர், எம்.முத்துக்குமார்:
இயற்கை மருத்துவ நிபுணர், எம்.முத்துக்குமார்:
உணவுகளை, முடிந்த அளவு, பழைய முறையில் தயாரிப்பது சிறப்பானது. குக்கரில் அதிக அழுத்தம் மற்றும் அளவு கடந்த வெப்பத்தால் வெந்த, தீட்டிய அரிசிச் சோறு, பசை போல், ஆகி விடுகிறது. நன்கு அரைக்கப்பட்ட டின் உணவுகளும், சத்து மாவுக் கூழும், ஜீரணத்துக்கு சிரமமானதே.ஓவனில் குறைந்த நீளம் கொண்ட அலைகளால் தண்ணீர் இல்லாமலேயே காய்கள் வெந்து விடுகின்றன. ஒரு கம்பியை எதிர் எதிர் திசைகளில், வேகமாக பலமுறை மடக்கினால், கம்பி வெப்பமடைகிறது. இது போல், காய்களுக்குள் இருக்கும் நீர் மூலக் கூறுகளை, இந்த அலைகள், மேலும், கீழும் பலமுறை வேகமாக உலுக்கி சூடேற்றித் தான் வேக வைக்கின்றன. இதற்காக செலுத்தப்பட்ட அலைகளில் சிறிதளவு, காய்களிலேயே தங்கி, உடலுக்குள் செல்வது தான் பிரச்னையாகும்.ஆரோக்கியத்துக்குப் பொருந்தாத உணவு தயாரிப்புகள், நிறைய உள்ளன. உதாரணமாக, சாம்பாரில் பருப்புடன் புளியும், புளி ரசத்தில் சர்க்கரையும், தயிர் சாதம் மற்றும் மோர் குழம்பில், தயிரும், மோரும் சூடாவதும், அசைவ உணவுடன், தயிர் சேர்த்துச் சாப்பிடுவதும், வெந்த உணவுகளுடன், பழங்களைச் சாப்பிடுவதும், ஜீரணத்துக்கு நல்லதல்ல.இவற்றோடு பாஸ்ட் புட், கலர் பொடிகள், ரிபைன்டு ஆயில் என, பலவிதமான தொந்தரவுகள் தொடர்கின்றன.நாம் எதைச் சாப்பிடுகிறோமோ, அதுவாகவே ஆவோம் என்பது, பொதுவான ஆரோக்கிய விதி. ஆனால், தன்னிடத்தில் புதிய உயிர்களை உண்டுபண்ண முடியாத பிராய்லர் கோழிகளையும், சேவல் சேராததால், குஞ்சு பொரிக்க முடியாத கூமுட்டைகளையும், இப்பொழுது அதிகம் பேர் சாப்பிடுகின்றனர்.பெட்டைக் கோழிகளான இவற்றின் மீது பயன்படுத்தப்படும் ஹார்மோன்கள், இவற்றை உண்ணும் பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக