வியாழன், 27 அக்டோபர், 2011

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: புற்றுநோயைக் குணப்படுத்துவானா ?

உலகம் முழுவதும் பேசப்படும்
17 வயது தமிழ்ச் சிறுவன்:
25 October, 2011 by admin
கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை என்றால் அது மிகையாகாது. அவர் மேலும் மேலும் வளர அதிர்வு இணையமும் அதன் வாசகர்களும் வாழ்த்துகின்றனர்.

Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 62532

Share298

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக