வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரையும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து பிரித்தானியா

தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரையும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து பிரித்தானியா

பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 50 பேர் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பிரித்தானியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களுக்குப் பாதுகாப்பாக பிரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகள் 100 பேரும் இந்த சிறப்பு விமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய அதிகாரிகளால் இவர்கள் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் இருந்து கட்டாயமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 50 பேரில் 27பேர் தமிழர்களாவர். ஏனையோரில் 12 சிங்களவர்களும், 11 முஸ்லிம்களும் அடங்கியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட தமிழர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களும் அடங்கியிருக்கலாம் என்பதால், அவர்களை குற்றப்புலனாய்வுத் துறையினரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் தனித்தனியாக விசாரிக்கவுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் நேற்றைய தினமே மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
திருப்பி அனுப்படும் அகதிகள் சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என்று பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும் பிரித்தானிய அரசு 50 பேரையும் நாடு கடத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு திருப்பி அனுப்பப்படுவோரின் பாதுகாப்புக் குறித்த கவலைப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்களாக காடியன், டெய்லி ரெலிகிராப் போன்றன விசனம் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக