ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

Local body elections - pending tax paid: உள்ளாட்சி த் தேர்தலில் வரி நிலுவை செலுததப்படுகிது.

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு பெருகும் வருவாய் `வரி பாக்கி தீவிரமாக வசூல் ஆகிறது

பதிவு செய்த நாள் : 24/09/2011



தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படாமல் தனித்து போட்டியிடுவது அ.தி.மு.க., தி.மு.க. தவிர, மற்ற கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தினாலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி பாக்கியை வசூல் செய்ய நல்ல தருணம் என்பதால் அரசுக்கு வர வேண்டிய வரி பாக்கிகள் பெரும்பாலும் வசூல் ஆகும் நிலை உள்ளது.
தனித்து போட்டி
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கடந்த சில மாதங்களாக கடும் போட்டியில் இறங்கியிருந்தார்கள்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைசிறுததைகள், கம்யுனிஸ்டு கட்சியினர் என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. இது, அரசுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தி தந்துள்ளது. பொதுவாகவே அரசுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்பட அனைத்தையும் செலுத்துவதில் அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவது இல்லை.
அரசுக்கு வருவாய்
ஆனால், தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை கட்டியே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில், வேறு வழிஇல்லாமல் இப்போது வரி பாக்கியை செலுத்தி வருகிறார்கள்.
சென்னை புறநகர் பகுதியில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வரை இதுபோல வரி பாக்கி வசூல் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் வசூல் ஆகும் நிலை உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், கவுன்சிலர்கள் பதவி வகித்தவர்கள் கூட, தங்கள் வீட்டு வரி பாக்கியை கட்டாமல் இருந்துள்ளனர். புறநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் நடைபெறும் பகுதியில் நகராட்சி தலைவராக இருந்தவரே, பாதாளசாக்கடை கட்டணம் கட்டாமல் இருந்துள்ளார். தேர்தலில் போட்டியிட நகராட்சி அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற இந்த வரிகளை கட்டியே ஆக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால், பல அரசியல்வாதிகள் `என்ன கொடுமை சார்? நம்ம கூட வரி கட்டவேண்டியுள்ளது, என மனம் நொந்தபடி வரி பாக்கியை செலுத்தி வருகின்றனர்’.
போட்டி அதிகமாக உள்ளதால் எந்த கட்சி வேட்பாளராவது தேர்தல் நடத்தைகளில் தவறு செய்கிறார்களா? என அதிகாரிகளைவிட போட்டி வேட்பாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வேட்பாளர்கள் சொத்து கணக்குகளை சரியாக காட்டுகிறார்களா? என்பதை கண்காணிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முக்கிய கட்சி வேட்பாளர்கள் கூட சொத்து கணக்குகளை எப்படி காண்பிப்பது, அனைத்து சொத்துகளையும் காண்பித்தால் வருமானவரி சோதனைக்கு ஆளாகுவோமா? என்றெல்லாம் சிந்தித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக