செவ்வாய், 27 செப்டம்பர், 2011

Super computer:மீமிசைக் கணினியை உருவாக்க ரூ.11 ஆயிரம் கோடி: இணையமைச்சர் அசுவனி குமார்


சூப்பர் கணினியை உருவாக்க ரூ.11 ஆயிரம் கோடி: இணையமைச்சர் அஸ்வனி குமார்

First Published : 27 Sep 2011 12:37:50 AM IST


திங்கள்கிழமை புது தில்லியில் நடந்த அறிவியல் - தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தின் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த இளம் விஞ்ஞானிகளுக்கு விருதளிக்கும் விழாவில் மத்
புது தில்லி, செப்.26: சூப்பர் கணினியை உருவாக்குவதற்காக ரூ. 11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்று அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்தார்.  புது தில்லியில் அறிவியல், தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்) திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இதை அவர் தெரிவித்தார்.  12-வது திட்டக் காலத்தில் சூப்பர் கணினி உருவாக்கும் திட்டத்துக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் ரூ.6 ஆயிரம் கோடியை இத்திட்டத்துக்காக ஒதுக்க அரசுக்கு ஆலோசனை இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.  முந்தைய ஐந்தாண்டுத் திட்டங்களில் நாம் சாதிக்க முயன்றதை விட மிகப் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நமக்கே சவால் விட்டுக் கொள்ளும் அளவுக்கு அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டியுள்ளோம். ஆராய்ச்சி மாணவர்கள் வழக்கமான ஆராய்ச்சி, மேம்பாட்டு ஆய்வு என்ற சிந்தனையிலிருந்து மாறுபட்டு சிந்திக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காகப் புதுமையான தீர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டெய்த வேண்டும் என்று அவர் கூறினார்.  விருதுகள்... விழாவின்போது சி.எஸ்.ஐ.ஆரின் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பல்வேறு ஆய்வுகளில் முன்னிலை வகித்த சிறந்த இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.  அறிவியல் ஆய்வுக்காகத் தரப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை மேற்கு வங்க மாநிலம் ஹெüராவிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மகான் மகராஜ் பெறுகிறார்.  பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் சுந்தரம் (வேதியியல் துறை), இந்திய அறிவியல் நிறுவனம்- பெங்களூரைச் சேர்ந்த கே.நாராயணசாமி பாலாஜி (மருத்துவ அறிவியல்), கோவாவிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சங்கர் துரைசாமி (நில இயல்) உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  45 வயதுக்கு உள்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. இதில் விருதுப் பத்திரத்துடன் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக