அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?
இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.
இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
– டி.எஸ்.எஸ்.மணி
Short URL: http://meenakam.com/?p=33988
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக