வியாழன், 8 செப்டம்பர், 2011

இலங்கையுடன் மின் ஒப்பந்தம்:இராமதாசு கண்டனம்

இலங்கையுடன் மின் ஒப்பந்தம்: 
ராமதாஸ் கண்டனம்

First Published : 07 Sep 2011 04:21:27 PM IST


சென்னை, செப்.7: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவமதிக்கும்வகையில் இலங்கை அரசுடன் இந்தியா மிகப்பெரிய பொருளாதார உடன்பாட்டை செய்துகொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை அவமதிக்கும்வகையில் இலங்கை அரசுடன் பொருளாதார உடன்பாட்டை இந்தியா செய்து கொண்டுள்ளது.இலங்கை கிழக்கு மாநிலத்தில் திரிகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் 3150 கோடி செலவில் 500 மெகாவாட் திறன்கொண்ட மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இந்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல்மின் கழகமும், இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் மின்வாரியமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை தீர்மீனத்தை மீறி இலங்கை அரசுடன் இந்தியா செய்துகொண்டுள்ள மின்திட்ட ஒப்பந்தம் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பி்ட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக