புதன், 14 ஜூலை, 2010

இந்தியத் தமிழரின் செந்நீரைப் பறிக்கத்தான் செம்மொழி அந்தஸ்தா? : பூநகரான் – கனடா

karuna001
புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர்  இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும்.
இதனை இந்திய அரசு தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தொடர இடம் கொடுப்பது கூட, இந்திய நடுவண் அரசின் ஆரிய திராவிட பாராபட்ச நிலையையே வெளிப்படுத்துகிறது.
ஒரு தமிழன் அல்லாத இந்தியனை இவ்வாறு பிற நாட்டுப் படைகள் கொன்றால் இந்திய மத்திய அரசினதும், அந்த மாநிலத்தினதும் நடவடிக்கைகள் வேறு விதமானவையாகவே இருக்கும். நிட்சயமாக அதை இவ்வளவு இலேசாக யாரும் கருத மாட்டார்கள்.
தமிழீழத் தமிழரைக் காக்க இயலாத தமிழகத் தமிழர் இன்று, தமிழகத் தமிழரையே காப்பாற்ற இயலாதிருப்பது தமிழினத்திற்கு உலகில் எங்காவது ஒரு சுய ஆதிக்கம் உள்ள நாடாவது தேவை என்பதையே உணர்த்துகிறது.
இன்றைய பூகோளத்தின் மிகக் கொடிய பாரிய இன அழிப்புத் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இதுவரை தொடங்காதிருப்பதன் செய்தியும் இது தான். தமிழருக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பில் குரல் கொடுக்க உலகில் தமிழனிற்கு என்று ஒரு நாடு தேவை.
ஐக்கிய நாடுகளிற்கான இந்தியாவின் பிரதிநிதி வாய் பேச மாட்டாதவரா ? இல்லை காது கண்கள் போன்றவை செயற்படாதவரா? இல்லை, அவரும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இராஜாங்க அமைச்சும், வெளிநாட்டமைச்சும், இந்திய பாதுகாப்பு அமைச்சும் தமிழரை இந்தியாவின் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கணிக்கின்றனவா? உங்களின் சீமானைக் கைது செய்த வேகம் எங்கே?
புலிகள் தனிநாட்டிற்காக தற்கொலை போராளிகளாக மாறியமைக்கான காரணங்களை உலகானது இந்த இந்திய  இலங்கை அரசுகளின் மாற்றான் தாய் மனப்பான்மையூடாகவே பார்க்க வேண்டும்.
இலவம் பூ வெடிப்பது இனத்தைப் பெருக்க. கரும்புலிகள் வெடித்தது இனத்தைக் காக்க. இதை சர்வ தேசத்திற்கு உறைக்கும் வகையில் இவ்வாறான கருத்துருவாக்ககங்கள் தமிழர் வாழும் அந்ததந்த நாட்டு ஊடகங்களில் வெளியாக வேண்டும்.
புலிகளை பயங்கரவாதிகள் என்று அழித்தவர்களே!
அரசியல் உரிமைகளைத்தான் விட்டாலும் தமிழர் உயிர்களையாவுது காப்பாற்ற வேண்டாமா?
இதைப் படிக்கும் இந்திய புலனாய்வுத் துறையினரே!
இப்போது இங்கே கொட்டப்படுவது இனத் துவேஜசம் அல்ல. தாயக மண்ணிலும் மட்டுமல்ல வள்ளுவன் சிலை பார்த்திருக்க கடலிலும் கொட்டுவது தமிழின் செம்மொழி இரத்தமே!
கலைஞரே!
இதுதான் செம் மொழி அந்தஸ்தைத் பெற்றுக் கொடுத்ததின் கூலியா? உங்கள் ஸ்ராலினோ, கனிமொழியோ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தாலும் இந்திய தேசிய உணர்வால் இப்படித்தான் அறிக்கை எழுதி விட்டு அடுத்த அலுவலைப் பார்ப்பீர்களா?
தண்டவாளம் வண்டவாளமாகியது எப்போது? சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இன்றைய தமிழக மாநில மத்திய அரசு உறவு போன்ற சுமுக நிலை என்றும் இருந்ததில்லை. இன்றே எதையும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களிடம் “றெயினிங்” எடுக்கும் ஸ்ராலினும் எதிர்காலத்தில் இதைத் தான் செய்வாரா?
இலங்கை  சென்று பொன்னாடை போர்த்திய அமைச்சர் பாலு எங்கே?
நம் இரத்தத்தின் இரத்தங்களே!
அடுத்த முதல்வராக ஆவது ஒரு உண்மையான தமிழனைத் தெரிவு செய்து பாருங்கள். நிட்சயம் அவனது தசையாவது ஆடும்.
இப்படிக் கவிதை பாடி காலத்தைக் கடத்தாது. புலம் பெயர் தமிழர்களே!
முத்துக்குமார் முத்தா குளித்தான் நமக்காக? நாங்கள் நன்றியுள்ள மானத் தமிழர்கள் தானா?
பிரபாகரனே! நீ உறுதியான தலைவனல்ல உண்மையான தமிழர் தெய்வமாக உயர்ந்து கொண்டிருக்கிறாய்.
மா வீரர்களே! எங்களை மன்னியுங்கள்! உங்கள் கல்லறைகளைக் கூட காக்க இயலாத பாவிகள் நாங்கள்.
அங்கே இலங்கைக் கொடியில் ஒரு சிங்கம். இந்தியாவின் இலச்சனையில் மூன்று சிங்கங்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக