திருப்பூரில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபா
திருப்பூர், ஜூலை 12: மத்தியில் அமல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:1996-க்கு பிறகு 2004 வரையிலான 8 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி புரிந்த அரசுகள் அமல்படுத்திய திட்டங்கள் ஏதும் நிலைத்து நிற்கக் கூடியதாக இல்லை.அத்தகைய அரசுகளால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், மதக் கலவரங்களுமே அதிகரித்தன. அதனால், 2004 தேர்தலில் நாடு திருப்பத்தை எதிர்பார்த்தது. அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர தமிழகம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி கிடைத்ததாலேயே அது சாத்தியமானது. அதற்கு துணை நின்ற திமுக, மார்க்சிஸ்ட், பாமக, மதிமுக கட்சிகளையும் மறக்க முடியாது.கடந்த 6 ஆண்டுகளில் பல சாதனைகளை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. நாடு முழுவதும் 4 கோடி விவசாயிகளின் ரூ.67 ஆயிரம் கோடி கடன் ரத்து, கல்விக் கடன் திட்டத்தின் கீழ் 19.41 லட்சம் மாணவர்களுக்கு ரூ.35,196 கோடி கடன் வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு என்பது வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் சிந்திக்கிறது. அந்தவகையில், வேலைக்கு உறுதி, கல்வி பெறுவதற்கு உறுதி அளித்துள்ள காங்கிரஸ் அரசு விரைவில் உணவுக்கும் உறுதி தரும் திட்டத்தை செயல்படுத்தும்.மாதம் 25 கிலோ அரசி ரூ.3-க்கு கிடைக்கும் வகையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும்.இவ்வாறான சிறந்த திட்டங்களை செயல்படுத்த மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் ஆட்சி வேண்டும். அப்போதுதான், மத்தியில் அமல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும். தற்போது நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளதென்று கூறுவதை ஏற்க முடியாது. எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் உயர்கிறது.விவசாயிகளுக்கு அரிசி, கரும்பு, கோதுமை, பால் உள்ளிட்டவற்றுக்கு அரசு கூடுதல் கொள்முதல் விலை கொடுக்கிறது. இதைத் தவிர்க்க முடியாது.அதேபோல, கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பது அரபு நாடுகள். இவற்றின் விலை உயரும் போதும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:06:00 PM
7/13/2010 4:06:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:03:00 PM
7/13/2010 4:03:00 PM


By pamaran
7/13/2010 3:50:00 PM
7/13/2010 3:50:00 PM


By sbala
7/13/2010 12:40:00 PM
7/13/2010 12:40:00 PM


By SANEESWARUN
7/13/2010 11:11:00 AM
7/13/2010 11:11:00 AM


By Vijay
7/13/2010 11:06:00 AM
7/13/2010 11:06:00 AM


By ismail
7/13/2010 10:22:00 AM
7/13/2010 10:22:00 AM


By ismail
7/13/2010 10:22:00 AM
7/13/2010 10:22:00 AM


By karunakaran
7/13/2010 10:15:00 AM
7/13/2010 10:15:00 AM


By Rj
7/13/2010 9:46:00 AM
7/13/2010 9:46:00 AM


By gopinath
7/13/2010 8:50:00 AM
7/13/2010 8:50:00 AM


By thamem
7/13/2010 7:17:00 AM
7/13/2010 7:17:00 AM


By karthik
7/13/2010 6:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
7/13/2010 6:02:00 AM