சென்னை, ஜூலை 11: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மறுபடி திருப்பி அனுப்பப்பட்டார்.ஈரோடு அருகே பவானிசாகர் முகாமில் இருந்த சந்திரலோகு (32) - கடந்த ஆண்டு இலங்கை சென்றார். அவருடைய மனைவி, ஊனமுற்ற குழந்தை இன்னும் இங்கு உள்ளனர்.இலங்கையில் இருந்து தன் குடும்பத்தினரைப் பார்க்க சனிக்கிழமை இரவு விமானம் மூலம் சந்திரலோகு சென்னை வந்தார். ஆனால் அவரை இறங்கவிடாமல் தடுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள் மறுபடி இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்று தமிழக க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் சந்திரலோகுவை திருப்பி அனுப்ப மத்திய அரசு கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விமானம் மூலம் அவர் திருப்பி அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது இதேபோல திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:08:00 AM
7/12/2010 3:08:00 AM


By Sunil
7/11/2010 11:19:00 PM
7/11/2010 11:19:00 PM


By ATamil
7/11/2010 9:02:00 PM
7/11/2010 9:02:00 PM


By Truth
7/11/2010 8:40:00 PM
7/11/2010 8:40:00 PM


By karunakaran
7/11/2010 7:52:00 PM
7/11/2010 7:52:00 PM


By Nakkeeran
7/11/2010 7:15:00 PM
7/11/2010 7:15:00 PM


By Nakkeeran
7/11/2010 7:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
7/11/2010 7:14:00 PM