புதன், 14 ஜூலை, 2010


சிங்களம்  எண்ணுவதைத்தான்  இந்தியம் சொல்லும். தமிழின அழிப்பில் ஈருடல் ஓரெண்ணம் கொண்டவர்கள். அவ்வாறிருக்க இந்தியத்தைச் சிங்களம் எதிரொலித்தால்போதுமென்பது இந்தியா படைகள், படைக்கருவிகள்,அழிவுக் குண்டுகள் தந்து தமிழினத்தை  அழித்ததை மறந்து சொல்லும் பேச்சா?  வெட்கக்கேடான  கருத்து. தமிழ்மானம் காப்பாற்றப்பட, தமிழர் தாயகம் காப்பாற்றப்பட, அழித்தவர்கள் தண்டனை பெற, வன்கொடுமை நிறுத்தப்பட, போராளிகளும் பொதுமக்களும் ஈந்த உயிருக்கு மதிப்பு ஏற்பட, இவ்வணியினர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நன்கு புரிகின்றது.
கொலைகாரச் சிங்களத்துடன் கைகோக்குமாறு மிரட்டப்படத்தான் இந்தியா சென்றார்கள் போலும். தங்கள் கருத்தை வலியுறுத்தி வெற்றி காணமுடியாதவர்கள் சொல்லாடலுக்குச் செல்லக்கூடாது.எனவே, த.தே.கூ.யினர் இனியேனும் மனம் மாறி ஈழத்தமிழர் நலனில் மட்டும் கருத்து செலுத்த வேண்டும். கொலைக் கூட்டாளிகளை  நம்பிப் பயனில்லை என்பதை உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக