திங்கள், 21 செப்டம்பர், 2009

உலக இந்துக்களைப் பாதுகாக்க மக்களவையில் தீர்மானம்:
அசோக் சிங்கால் கோரிக்கைவிஸ்வ இந்து இணையதள (வெப்) டிவியை தொடங்கி வைத்துப் பேசுகிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால்.
சென்னை, செப். 20: உலக இந்துக்களைப் பாதுகாக்க மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் "விஸ்வ இந்து டி.வி' என்ற இணையதள தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடக்கி வைத்து அசோக் சிங்கால் பேசியது: "உலகில் உள்ள மக்களில் மிகவும் பொறுமையான மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் படைத்தவர்கள் இந்துக்கள் மட்டுமே. ஒரு போதும் வன்முறையைக் கையில் எடுப்பதில்லை. இந்துக்கள் அகிம்சை வழியைக் கடைப்பிடிக்கின்றனர். இந்துக்களின் கருத்துகளை உலகிற்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதை இது போன்ற ஊடகங்கள் மூலம் கொண்டு செல்ல முடியும்' என்றார் அசோக் சிங்கால். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அசோக் சிங்கால் கூறியது: மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ""அத்வானி பதவி விலக வேண்டும்'' என்றோ, ""மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை'' என்றோ நான் கூறவில்லை. நான் பேசுவதை ஊடகங்கள் திரித்துக் கூறி வருகின்றன. அத்வானி பெரிய அரசியல்வாதி, பெரிய கட்சியை அவர் வழிநடத்திச் செல்கிறார். அவருக்கு நான் ஆலோசனை கூற ஒன்றும் இல்லை; ஏனென்றால் நான் அரசியல்வாதியல்ல. உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே மத்திய அரசின் உதவியுடன் மிகப் பெரிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதால் கங்கை நதிக்கு பாதிப்பு ஏற்படும். இதைக் கைவிட்டுவிட்டு அப்பகுதில் சிறிய, சிறிய அணைகளைக் கட்டலாம். அணை அமைய உள்ள இடத்தைப் பார்வையிட, வரும் அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் மடாதிபதிகள் அடங்கிய குழுவினர் செல்ல உள்ளோம். இது குறித்துப் பேசுவதற்குத்தான் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இலங்கையில் வாழும் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதே இலங்கை அரசின் குறிக்கோளாகும். அங்கு வாழ்ந்த 10 லட்சம் தமிழர்கள் ஏற்கனவே குடிபெயர்ந்து விட்டனர். மிஞ்சியுள்ள 3 லட்சம் தமிழர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதே நிலைதான் நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்துக்களுக்கு உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து உலக இந்துக்களைக் காக்கும் வகையில் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்போது சீனப்படை இந்தியாவில் அதிக அளவு ஊடுருவி வருகின்றது. இந்தியா கோழைத்தனமான நாடு அல்ல. ஆனால் ஒரு கோழைத்தனமான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனால்தான் 10 லட்சம் ராணுவ வீரர்கள் நம் கையில் இருந்தும் ஊடுருவல்கள் நடக்கின்றன என்றார் அசோக் சிங்கால். நிகழ்ச்சியில் அகில இந்திய செயல் தலைவர் வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆளவந்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானத்தால் என்ன பயன்? உண்மையிலேயே தமிழர்களை இந்துக்களாகக் கருதினால் இன்னும் கடுமையாகப் போராடுங்கள். தமிழ் ஈழம் அமையட்டும்! நேபாளத்திற்காகத்தான் கூறுகின்றீர்கள் என்றால் வாயை மூடிக் ‌கொண்டு இருங்கள். ... ... இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 2:42:00 AM

punda mahane where where you when people died.

By kuppu
9/21/2009 1:00:00 AM

Appreciations to VHP for this. Appreciations to BJP in particular for pro-tamil, pro-minority, pro-social stand. Don't listen to extreme fundamental elements like RSS .. Congress and non-BJPs are ready to blame BJP for any violence, even by starting itself to fool people.

By keeran
9/21/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக