புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி) வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார்.
நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி, காடையாம்பட்டி பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது.
அறிவுரைஞர் (PDI) திருமிகு.இரேகா பேசுகையில், ‘’ஆணுக்குப் பெண் சமம். எனவே பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தையினை போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
(துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா)
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார்.
வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக!
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் : www.instituteofasianstudies.com
குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign Studies University (BFSU)] இயங்குகிறது. சீன மொழியில் இதனைச் சுருக்கமாகப் ‘பெய்வெய்’ என்று அழைக்கின்றனர் தமிழில் அயல்மொழிப் பல்கலைக்கழகம் என்றும் குறிப்பிடுகிறோம்.
சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் தரப்படுகின்றன. தமிழ்முதலான 84 மொழிகளும்கற்பிக்கப்படுகின்றன.
சீனர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்றுத்தரும் திட்டம் ஆசியவியல் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சீன நாட்டிலிருந்து பத்து மாணவர்கள் இங்கு 4 ஆண்டுப்படிப்பில் சேர்ந்து தமிழ்மொழியினைப் பயின்று வருகின்றனர்.
1941 இல் நிறுவப்பட்ட வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகளுக்கு முன்னரே தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. சீனாவில் தமிழ் என்று மேம்போக்காகத் துள்ளுவதை விட அதனைப் பரவலாக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் கொடையாளர்களையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு இந்தக் கலந்துரையாடல் துணை புரியும்.