“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான
செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”
சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு!
“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 / மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆனந்தி வரவேற்கிறார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் எழுதியுள்ள “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு” நூல் குறித்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர் நூல் திறனாய்வுரை நிகழ்த்துகிறார்.
இதனையடுத்து, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம்), மருத்துவர் கோ. பிரேமா (மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு), மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் தோழர் மு. செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவாக, தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தோழர் க. மாதவி நன்றி கூறுகிறார்.
இந்நிகழ்வில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
==============================
மகளிர் ஆயம்
முகநூல் : www.fb.com/MagalirAyam
==============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக