லக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ 

  வழங்கப் பெற்றது. 

      இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும்  கவிஞர் மு.முருகேசுக்கு  ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை,  கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில் ‘அன்னம் விருது’ வழங்கப் பெற்றுள்ளது.
     இந்த விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்தியா பவன் அரங்கில் நேற்று (26/4) மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மூத்த வழக்குரைஞர் ’சிகரம்’ ச.செந்தில்நாதன் தலைமையேற்றார். ‘இலக்கிய வீதி’ அமைப்பின் நிறுவனர் இனியவன் முன்னிலை வகித்தார். கவிஞர் கந்தர்வனின் படைப்புகள் பற்றி கவிஞர்தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
   கவிஞர் மு.முருகேசுக்கு  ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ‘அன்னம் விருதினை’ வழங்கினார்.
விழாவில், ’இலக்கிய வீதி’ அமைப்பின் துணைத் தலைவர் வாசுகிபத்திரி, கவிஞர்கள் செயபாசுகரன், அமுதபாரதி, மயிலாடுதுறை இளையபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், யாழினி முனுசாமி, பாரி கபிலன், எழுத்தாளர்கள் புதுகை மு.தருமராசன், பானுமதி தருமராசன், எசு.வி.வேணுகோபாலன் முதலான ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   விழாவை, துரை.இலட்சுமிபதி  ஒருங்கிணைத்தார்