பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு
எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019
தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்
 பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின்
110ஆவது பிறந்தநாளாகும்.
இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ் (ISSN e-journal) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 
கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரையாளர்கள் தத்தம் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.
தலைப்புகள்:
1. பேராசிரியர் சி.இலக்குவனாரின் மொழியியல் துறை பங்களிப்பு
2. பேராசிரியர் சி.இலக்குவனாரின் இலக்கணத் துறை பங்களிப்பு
3. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி
4. பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறளாராய்ச்சி
5. பேராசிரியர் சி.இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆராய்ச்சி
6. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு
மேற்கண்ட தலைப்பு சார்ந்த கட்டுரையினை அளிக்க விரும்பும் தமிழ் ஆய்வாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். மிகக் குறைந்த கட்டணத்தோடு இந்த மின் ஆய்விதழ் வெளியிடவுள்ளோம். கட்டுரையாளருக்கு மின் நற்சான்றிதழ் வழங்கப்படும். 
ஆசிரியர் குழு
பேராசிரியர் முனைவர் சு. குமரன், இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, பேசி : +6012-312 3753
இணை ஆசிரியர்
1. தகைசால் பேராசிரியர் முனைவர் இரேணுகா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா, பேசி : +91 9486898197
2. முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு, இந்தியா
3. முனைவர் பு.பிரபுராம், தலைவர், தமிழ்த்துறை, கே.எசு.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் – 637215, தமிழ்நாடு, இந்தியா
3. தமிழ்ச்செம்மல் தனேசு பாலகிருட்டிணன், சித்தியவான் ஆசிரியர் நடவடிக்கை மையம், மலேசியா கல்வி அமைச்சு,  மலேசியா
கட்டணம் : இந்தியா உரூபாய்/ INR 500/-
பக்க அளவு: 5-6 பக்கத்திற்குள்
மின்னஞ்சல்: b.thanesh@yes.my  ; கைப்பேசி : +6014-3279982
முகநூல் : http://facebook.com/kaappiyam (இது குறித்த பதிவு இதில் இதுவரை இல்லை.)
நன்றி
கட்டுரையினைக்  கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.  b.thanesh@yes.my
கட்டணத்தை எங்கள் இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் பெறுகைச் சீட்டின் படியை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.
வங்கி : Karur Vysa Bank , Account Holder : Seetha Durai, Account Number: 1219155000123271, Branch : Whites Road, IFSC Code : KVBL0001219