அகரமுதல 182, சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
உலகச் சித்தர்கள் மாநாடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகச் சித்தர்கள் மாநாடு சித்திரை 01, 2048 / 14-04-2017அன்று நடைபெற்றது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் விழாவ மலரை வெளியிட்டு உரையாற்றினார். மரு.பாசுகரன் தலைமை வகித்தார். தமிழ்ப் பண்பாட்டுச் சங்கப் பொதுச் செயலாளர் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் (பிரதாபசிம்மன்) வரவேற்புரையாற்றினார். பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ. மணவழகன் முன்னிலை வகித்தார்.
பி.ஏ. சத்தியநாராயணன்
தொடக்கவுரையாற்றினார் வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். முன்னாள்
துணைவேந்தர் டி.சி. நாராயணன், பேரா.இராமசாமி, மரு. இராமலிங்கம், மரு.
முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக