செம்மொழித்தமிழுக்கான 2014-2015, 2015-2016 ஆம் ஆண்டுகளுக்குரிய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை வருமாறு :-
2014-2015
தொல்காப்பியர் விருது – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
இளம் அறிஞர் விருதுகள்
- முனைவர் அ.சதீசு
- முனைவர் செ.முத்துச்செல்வன்
- முனைவர் ப.திருஞானசம்பந்தம்
- முனைவர் மா.வசந்தகுமாரி
- முனைவர் கோ.சதீசு
2015- 2016
தொல்காப்பியர் விருது – முனைவர் இரா.கலைக்கோவன்
இளம் அறிஞர் விருதுகள்
- முனைவர் மு.வனிதா
- முனைவர் வெ.பிரகாசு
- முனைவர் சிரீ. பிரேம்குமார்
- முனைவர் க.பாலாசி
- முனைவர் மு.முனீசு மூர்த்தி
வழக்கம்போல்
இவ்வாண்டுகளிலும் அயல்நாட்டுத் தமிழறிஞர்களுக்கான குறள்பீட விருதுகள்
அறிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் கண்களுக்கு அயலகத் தமிழறிஞர்கள்
ஒருவர்கூடப் படவில்லை போலும்!
இது கண்டிக்கத்தக்கது!
ஆர்வமாகச் செயல்படுவதாகக் கூறப்படும்
இப்போதைய இயக்குநர் திரு அ.பழனிவேல் (பதிவாளர், தேசியத்
தொழில்நுட்பக்கழகம், திருச்சிராப்பள்ளி), பதிவளார் முனைவர் முகிலை
இராசபாண்டியன் ஆகியோர் உரிய பரிந்துரைகளை அனுப்பிஅயலகத்தமிழறிஞர்களுக்கான
குறள்பீட விருதுகளை வழங்க நடிவக்கை எடுக்க வேண்டும்.
விருதாளர்களுக்கு
அகரமுதல இதழ் சார்பில் வாழ்த்துகிறோம். விருதாளர்கள் விருதுகளுக்குத்
தகுதியானவர்கள் என மெய்ப்பிக்க எப்பொழுதும் செம்மையான நடையில் பேசவும்
எழுதவும் வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக