தமிழ்ப்பட நிலையம்(thamizhstudio) – பாலுமகேந்திரா குறும்பட விருது 2017

   இயக்குநர் பாலுமகேந்திரா நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் தமிழ்ப்பட நிலையம் குறும்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது; நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது.
விருதுத் தொகை: உரூபாய் 25000/-
தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்.
விதிமுறைகள்:
* பாலுமகேந்திரா விருதுக்குக் குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் உரூபாய் 250/– “PADACHURUL” என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாக (DD) கீழ்க்குறிக்கப்பெறும் முகவரிக்குப் படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், முற்றிலும் திரைப்படப் புத்தக அங்காடி (Pure cinema  puthaka angaadi) யில் உரூ.250 பணத்தைக் கொடுத்து அதற்கான ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமையங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் இறுவட்டு அல்லது குறுவட்டு (டி.வி.டி அல்லது வி.சி.டி).- இல் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முதன்மைக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos),  இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
* குறும்படங்கள் 01.01.2012 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கு 250 உரூபாய் நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாக மடல் போக்குவரத்துகள், அலைபேசி அழைப்புகள் ஏற்கப்படா.
* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* பரிசுகள் பாலுமகேந்திரா பிறந்த நாளான மே 19 அல்லது மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதிநாளில் வழங்கப்படும்)
* விருதுக்குக் குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: மே 03, 2017
* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
முற்றிலும் திரைப்படப் புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026.
தரவு: முதுவை இதாயத்து