திங்கள், 15 பிப்ரவரி, 2016

தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. – தாகூர்

தலைப்பு-தமிழர்நாகரிகத்தால்-இந்தியநாகரிகம் செழுமை - thalaippu_panbaattupangalippu

தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது.
  ஆரியரல்லாதார் இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்பைப் பயன்மதிப்பு அற்றதென யாரும் கருத வேண்டா. உண்மையைச் சொல்லுவதெனில், பழந்தமிழ்ப் பண்பாடு எவ்வகையிலும் மதிப்புக் குறைந்ததன்று.
  திராவிடப் பண்பாட்டோடு ஆரியப் பண்பாடு ஒன்று சேர்ந்ததால் தோன்றியதே இந்திய நாகரிகம். திராவிடப் பண்பாட்டின் தாக்கத்தால், இந்திய நாகரிகம் செழுமையும் சிறப்புமுற்றது; அகலமும் ஆழமும் அடைந்தது.
   … … … அவர்கள் மெய்யுணர்வுடன் கலையுணர்வு மிக்க கலைஞர்கள்; ஆடலிலும் பாடலிலும் அவர்கள் தன்னிகரற்றவர்கள். கவின்மிகு கலைவடிவங்களைத் திட்டமிட்டு வகுப்பதிலும், வியத்தகு கோயில்களைக் கட்டுவதிலும், அவர்கள் கை தேர்ந்த கலைஞர்கள்; உணர்ச்சிச் செறிவும் படைப்புத் திறனும் வாய்ந்த திராவிடரின் கலையுணர்வை ஆரியரின் அப்பாலைத் தத்துவம் (Transcendentalism) மணம் புரிந்து கொண்டதனால் பிறந்த மழலைச் செல்வமே  ‘இந்திய நாகரிம்’
இரவீந்திரநாத்து தாகூர்:
விசுவ பாரதி
தொகுதி 1 எண் 1 பக்கம்.4


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக