வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி
மாநிலம் முழுவதும் தொடக்கம்
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் பிப்பிரவரி 15 முதல் 29–ஆம் நாள் வரை 234 சட்டமன்றத்
தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால்
மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர்
பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள்,
ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் பெயர்களையும்
இறந்தவர்கள் பெயர்களையும் நீக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய
நோக்கமாகும்.
18 அகவை பூர்த்தி அடைந்த வாக்காளர்கள்
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமலிருந்து, தற்போது
புதியதாகப் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6–இலும், வாக்காளர்
பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப் படிவம் 7–இலும், வாக்காளர் பட்டியலில்
உள்ள எழுத்துப்பிழைகள் போன்ற தவறுகளில் திருத்தம் மேற்கொள்ள
விரும்புபவர்கள் படிவம் 8–இலும், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் ஒரு
பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாறுதல் செய்ய விரும்புபவர்கள் படிவம்
8–இலும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் இந்த அரியவாய்ப்பினை நன்கு பயன்படுத்தி 100 விழுக்காடு சரியான
வாக்காளர் பட்டியலை உருவாக்கத் தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்குமாறு
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் இராசேசு இலக்கானி கேட்டுக் கொண்டுள்ளார்.
– படம்: நன்றி: தமிழ் வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக