புதன், 17 பிப்ரவரி, 2016

இன்றைய நடவடிக்கைக்கு: உலகத் தமிழ்ச் சங்கத்தில் தட்டெழுத்தர், அலுவலக உதவியாளர் பணி
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தட்டெழுத்தர், அலுவலக உதவியாளர் பணி

 

மதுரை உலகத் தமிழ்ச் சங்க அலுவலகத்தில்  பணியாண்மைப் (நிருவாகப்) பிரிவில் காலியாக உள்ள தட்டச்சர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிறைவு செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தட்டச்சர் - 01
ஊதியம்: மாதம் உரூ.5,200 - 20,200 + 2400
தகுதி: பள்ளி மேல்நிலை இறுதி வகுப்புத் (+2) தேர்ச்சியுடன், தட்டச்சுப் பயிற்சி - தமிழ், ஆங்கிலம் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை, ஆங்கிலம் இளநிலை அல்லது தமிழ் இளநிலை, ஆங்கிலம் முதுநிலை. கூடவே கணினிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அகவை வரம்பு:
18 - 35க்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமை: ஆதிதிராவிடர், அருந்ததியர் (பெண்) முன்னுரிமை.

பணி: அலுவலக உதவியாளர் - 01
தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்புத் தோல்வி.
ஊதியம்: மாதம் ரூ.4,800 - 10,000 + 1,300
அகவை வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை: பொதுப்போட்டி (GT), பொதுப்போட்டி - முன்னுரிமை பெற்றவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தனி அலுவலர்,
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை,
மனை எண்.320, காவியன் வணிக வளாகம்,
மூன்றாவது தளம், அறிஞர் அண்ணா நகர்,
மதுரை-
625020.
தொலைபேசி எண்:
0452 - 2530766.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல், மின்னஞ்சல் வழியில் வந்து சேரக் கடைசி நாள்: 17.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே சொடுக்குக!