சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ்
சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய
சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க்
காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன.
மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை,
ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும்,
அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக்
கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி,
முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி,
ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி,
வள்ளைப்பாட்டு ஆகிய வகைகளில் இசைப்பாடல்களைச் சிலப்பதிகாரத்தில்
காண்கிறோம்.
முனைவர் இரா.திருமுருகன்:
ஏழிசை எண்ணங்கள்:
பக்கம்.73
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக