தலைப்பு-கண்டுபிடி ;thalaippu_kandupidi

வருகிற ஆவணி 14, 2047 / ஆகத்து 30 ஆம் நாள் அன்று,

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழமண்ணில் வாழவழியின்றித் தவிக்கும் தமிழர்களிடையே,
 காணாமல் போனவர்களைக் கண்டுபிடி!
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்!
நஞ்சூட்டப்பட்ட  மேனாள் போராளிகளைக் கொலை செய்யும் சதிக்கு முடிவு கட்டு!
என ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள். நாமும் பல்வேறு வகைகளில் இத்தகைய  கோரிக்கைகளை வலியுறுத்த, தெருவுக்கு வருவோம்.
   அன்புள்ள தமிழினியன்.
அமைப்பாளர்
தமிழீழ மக்கள் தோழமை மையம்.

345அ, வந்தவாசி சாலை
மாத்தூர்
வெம்பாக்கம் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு
631701