புதன், 8 ஜூலை, 2015

தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன – மா.நன்னன்

maa.nannan01
தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன.
  நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்துவிடக் கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துக்கள் நாட்டில் பரவவேண்டும்.
– பேராசிரியர் புலவர் மா.நன்னன்: (கலைஞரின்) தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம்.23
 அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக