thamizh07
சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது
  1. இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை.
  2. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல்.
  3. சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை.
  4. தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை.
  5. பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை.
  6. காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை
  7. என்றும் அழியாப் புத்தழகு உடைமை.
  8. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை.
  9. பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை.
  10. பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும் உடைமை.
  11. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்ற இருவகை வழக்கிலும் ஒரே மாதிரியாக இயங்குந்தன்மை உடைமை.
  12. ஒலி வடிவு, வரி வடிவு ஆகிய இருவித வழக்குகளுக்கும் ஏற்ற இயைபு உடைமை.
  13. அருள் நிலைத்தற்கேற்ற மறைமொழிகளை உடைமை.
  14. பல்கலை நூற்களை உடைமை.
  15. இலக்கண வரம்பு உடைமை.
  16. வழக்கு வீழ்ந்தொழியாமல் என்றும் ஒரு படித்தாயுள்ளதன்மையுடைமை.