தேவதானப்பட்டியில் முனைவர் சிவந்தி
ஆதித்தனார் நற்பணி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட சிவந்தி
ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்டத் துணைச் செயலர் வி.சிரீதர் தலைமை
தாங்கினார். செல்வி சாந்த சொரூபன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத்
தொடக்கி வைத்தார்.
மஞ்சளாறு அணை முனைவர் சிவந்தி ஆதித்தனார்
மன்றக் கிளைத் தலைவர் பி.செயராசு முன்னிலை வகித்தார் நகர்மன்ற
உறுப்பினர் இரமேசு வரவேற்புரை நிகழ்த்தினார்.
சாந்தசொரூபன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராகக் கலந்து கொண்டார்; சாந்தசொரூபன், “இளைஞர்கள் தற்பொழுது தீய
பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் வழிப்பறி, கொலை,
கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்
தவிர்ப்பதற்கு இளைஞர்கள் ஆதரவற்றோர், வறியவர் ஆகியோருக்கு உதவ
முன்வரவேண்டும். மேலும் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் இன்றைய
இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். சிவந்தி
ஆதித்தனார் அவர்கள் ஆசைக்கிணங்க சாதி, மத வேறுபாடின்னிற முதியோர்,
ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவிட இளைஞர்கள் அதிக அளவில் முன்னேற வேண்டும்”
என்று வலியுறுத்தி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி
மாவட்டத்துணைச்செயலாளர் சரீீதர், “சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கைச்
சரித்திரம்” என்ற நூலை அனைவருக்கும் வழங்கினார். இந்து நாடார் இளைஞர்
சங்கத்தின் தலைவர் பி. இராசா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில்; செல்வம்,
செயலாளர் பாண்டி முதலான ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக