தேனி மாவட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.)
பொறுப்பாளர்கள் கூட்டம்
தேவதானப்பட்டியில் இ.கு.க.(எசு.டி.பி.ஐ.கட்சியின்) நகர நிருவாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பாரூக்
இராசா தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொருளாளர் சையது ஆசிக்
அவர்களும் கம்பம் தொகுததி தலைவர் நிசாம் அவர்களும் மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் சாகிர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றினர்.
பொட்டிப்புரம் ஊரில் அமையவுள்ள நீயூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டும் பணியை மாநில அரசு துரிதப்படுத்தவேண்டும்.
தேனி மாவட்டத்தில் சாலைகள் மிகவும் மோசமானதாக உள்ளதால் மாவட்ட நிருவாகம் விரைவாக சாலைகளைச் சீரமைக்கவேண்டும்.
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தனியார் மதுபானக் கடையை அகற்றவேண்டும் எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் கணவாபீர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக