தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால்
கருகும் வேப்ப மரங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன.
தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஆண்டும்
இல்லாத அளவிற்கு பனிகொட்டுகிறது. இதனால் உழவு பெரிதளவில் பாதிப்படைகிறது.
குறிப்பாக முளரிப்பூ(உரோசாப்பூ), மல்லிகைப்பூ முதலான பூ வகைகளும்
காய்கறிகளும் பனியால் வாடி வருகின்றன. இந்நிலையில் மருந்துப்பொருளாகவும்,
கிருமிநாசியாகவும் உள்ள வேப்பமரங்களின் இலைகள் பனியால் கருகி இலைகள்
உதிர்ந்து வருகின்றன.
மேலும் கடும் பனியால் பொதுமக்கள் தீராத நெஞ்சுசளி, காய்ச்சல், இருமல் போன்றவையால் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிருவாகம் சார்பில் மருத்துவமுகாம்கள் அமைக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக