சனி, 31 ஜனவரி, 2015

தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பெற்றன





- அகரமுதல 63 நாள் தை11,2046 / சனவரி 25, 2015
















தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பெற்றன

திருக்குறள் பாசுகரன், கவிஞர் கண்மதியன் முதலானோருக்கு விருதுகள் வழங்கப்பெற்றன.



தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர்  நாள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில்  தை 2, 2046 / சனவரி 16, 2015 அன்று மாலை கொண்டாடப்பட்டது;   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்: செய்தி - சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராசேந்திர பாலாசி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்சாரம், மதுவிலக்கு- ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார்.

அதன்படி, திருவள்ளுவர் விருது-திருக்குறள் க.பாசுகரன், தந்தை பெரியார் விருது- தாவூசி குப்தா, அம்பேத்கர் விருது-ஆழி.கு.மகாலிங்கம், பேரறிஞர் அண்ணா விருது-கத்தூரிஇராசா, பெருந்தலைவர் காமராசர் விருது- கருமுத்து தி.கண்ணன், மகாகவி பாரதியார் விருது-இளசை சுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன் விருது-கவிஞர் கண்மதியன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது-தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் செயலர் கரு.நாகராசன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது-ஏ.எம். சேம்சு ஆகியோருக்கு  வழங்கப்பட்ன.

30 பேருக்கு நிதியுதவி

விருது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உரூபாய்  நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம்,  விருதுக்கான தகுதியுரை ஆகியவை விழாவில் வழங்கி  விருதாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்குத் திங்கள் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது.

 தொடக்கத்தில் தமிழ்வளர்ச்சி - செய்தித்துறைச்செயலர்  முனைவர் மூ.இராசாராம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.  இறுதியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர்  முனைவர் கா.மு. சேகர் நன்றி கூறினார்.
  (ஒளிப்படங்கள் நன்றி : செயா தொலைக்காட்சி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக