திங்கள், 26 ஜனவரி, 2015

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை! – வைகை அனிசு

63pudhucheri-busstand-uriner

புதுச்சேரி பேருந்துநிலையத்தில்

கழிப்பிடம் இல்லாததால்

பொதுமக்கள் முகம் சுளிப்பு

  புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதிய பேருந்துநிலையத்தில் இலவசக் கழிப்பிட வசதி இல்லாததால் பட்டப்பகலில் ஆண்கள் பேருந்துநிலையத்தினுள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிக்கமேடு, கடற்கரை, ஆசிரமங்கள், தியானமண்டபங்கள், திரௌபதி அம்மன்கோயில் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இதனைக் கண்டு களிப்பதற்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். புதுச்சேரி பேருந்துநிலையத்தில் ஆண்கள் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் கெடுநாற்றத்தால், பெண்பயணிகள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது. எனவே புதுச்சேரி அரசும், சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் இணைந்து இலவசக் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக