gangaikonda.vetrichinnam03
சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது.
இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட சோழபுரம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுப்புற ஊர்கள் முதலியன பற்றியும் விரிவான நூல் ஒன்றைக் கண்ணியம் இதழ் உருவாக்குகிறது. இவை பற்றிய கட்டுரை ஒன்றை அனுப்ப வேண்டுகிறோம்.
ஊர், கோவில், சிற்றூர், தொல்லியல் தடயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், தாள் ஆவணங்கள், செவிவழிச் செய்திகள், வாய்மொழிப்பாடல்கள், பட்டப்பெயர்கள் இருப்பின் கண்ணியம் முகவரிக்கு எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். தகவல் தருவோரின் பெயர் கண்ணியம் இதழிலும் நூலிலும் இடம் பெறும்.
ஆ.கோ.குலோத்துங்கன், ஆசிரியர், கண்ணியம்
kanniyam-kulothungan0217/95, மூன்றாவது முதன்மைச்சாலை, இராம்நகர், சென்னை 600082
பேசி 044-2671 2770; 94456 06770

அகரமுதல41