புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை
ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் ஒன்றைத் தனித்தமிழ் இயக்கம்
முதலமைச்சர் அரங்கசாமி அவர்களிடம் நேரில் அளித்தது.
தனித்தமிழ்இயக்கத்தலைவர் முனைவர்
க.தமிழமல்லன் தமிழறிஞர்களுடன் சென்று அளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை
அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் 32ஆண்டுகளுக்கும் மேல்
வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்காகவும் தமிழ் மொழி மேம்பாட்டுக்காகவும் இலக்கிய
மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றை உடனடியாக
அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வேண்டுகோளில் பல கட்சிகளைச்சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும் பல
கட்சித்தலைவர்களும் தமிழ் இயக்கத்தலைவர்களும் தமிழ்அன்பர்களும் கையொப்ப
மிட்டிருக்கின்றனர்.
தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கக் கோரும் அவ்வேண்டுகோளை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் தாம் அதைக் கவனிப்பதாகக் கூறினார்.
அந்த வேண்டுகோளின் படியைக் கல்வி அமைச்சர்
தியாகராசன் அவர்களிடமும் தனித்தமிழ் இயக்கத் தலைவர் அளித்து விரைந்து தமிழ்
வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இப்போது
நடைபெறும் ஆட்சியில் தமிழுக்கு எவ்வகை ஆக்கப்பணியும் செய்யப்படவில்லை
என்னும் குறைபாடு தமிழ் அறிஞர்களிடையே இருப்பதாகவும் முனைவர் க.தமிழமல்லன்
கல்வி அமைச்சரிடம் எடுத்துக்கூறினார்.
முனைவர் க.தமிழமல்லனுடன் முனைவர் சம்பத்
து, முனைவர் எழில் வசந்தன் எழுத்தாளர் து. சடகோபன், எழுத்தாளர்
ப.திருநாவுக்கரசு ஆகியோர் இந்தச் சந்திப்பில்கலந்துகொண்டனர்.
- க.தமிழமல்லன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக