திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது
சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், ஆகத்து 15, 16 நாட்களில் திருச்சி, இரவி
சிற்றரங்கில் நிறுவப்பட்ட பாவலர்மு.வ.பரணர் அரங்கில் நடைபெற்றது. ஆகத்து 15
– வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சிறப்புப் பொதுக்குழுவை,
தலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பொதுக்குழு
உறுப்பினர்கள் தோழர் மேரி, சென்னை,தாம்பரம் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோரைக்
கொண்ட தலைமைக்குழுவழிநடத்தியது. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச்
செயலாளர் தோழர்கி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க
நிகழ்வாக, அமைப்பின்கொடியைத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன்
அவர்கள் ஏற்றி வைத்துஉரையாற்றினார். பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன்
பாவலர் மு.வ.பரணர் படத்தைத் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில்
அண்மையில்மறைந்த சான்றோர்களுக்கும், போராளிகளுக்கும், தமிழீழப்
போராளிகளுக்கும், மக்கள் விடுதலைக்காகப் பணியாற்றி மறைந்த உலகத்
தலைவர்களுக்கும் அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
தோழர்கள் குழ.பால்ராசு, நா.வைகறை, அ.ஆனந்தன், கோ.மாரிமுத்து, க.முருகன்,
க.அருணபாரதி ஆகியோர், தமிழகமெங்கிலுமிருந்து அழைக்கப்பட்ட பொதுக்குழு
உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்று பெயர் மாற்றப்பட்டது
இந்தியாவில் பல தேசிய இனங்கள், பல
தேசிய மொழிகள் இருக்கின்றன. இவற்றுள்தமிழ்த் தேசிய இனமும், தமிழ் மொழியும்
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்தஇனமும் மூத்த மொழியும் ஆகும்.
மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டஎழுத்து இலக்கியம் இந்தியத்
துணைக் கண்டத்தில், தமிழுக்கு மட்டுமேஇருக்கிறது.
ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில்,
தமிழ்த் தேசிய இனம் தன்னைத் தானேஆண்டுகொள்ளக் கூடிய அரசியல் உரிமை உள்ளிட்ட
பல்வேறு உரிமைகள் தேவை என்றுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த 25
ஆண்டுகளாகப் பரப்புரை செய்தும்போராட்டம் நடத்தியும், இயங்கி வருகிறது.
தமிழ் மொழியை முழுமையான ஆட்சிமொழியாக -கல்வி மொழியாக -வழிபாட்டு மொழியாகச்
செயல்படுத்தல், காவிரி – முல்லைப் பெரியாறு – பாலாற்று உரிமைகளை மீட்டல்,
கச்சத்தீவை மீட்டு தமிழகமீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற
உரிமைகளுக்கு முதன்மை கொடுத்துப்போராடி வருகிறது. அதே போல், தமிழீழ
விடுதலைக்கு தோள் கொடுத்துப் போராடிவருகிறது. இப்போராட்டங்களில்,
அவ்வப்போது நூற்றுக்கணக்கான தோழர்கள் பலவழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டு
ஈகங்கள் (தியாகங்கள்) செய்துவருகின்றனர்.
‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியலை
வளர்த்து, அதற்கு முதன்மை கொடுத்துஇயங்கி வருகிறது. தமிழ்த் தேசியப்
போராட்டங்களை முதன்மைப்படுத்தி இயங்கிவரும் இக்கட்சியின் பெயரில்,
‘பொதுவுடைமைக் கட்சி’ என்று இருப்பதும், தேர்தலில் பங்குகொள்ளாத
இவ்வியக்கத்தின் பெயரில் ‘கட்சி’ என்ற சொல்இருப்பதும் சமகாலத்தில்
பொருத்தப்பாடானதாக இல்லை. மேலும், தமிழ்த் தேசியஇனத்திலுள்ள பல்வேறு பிரிவு
மக்களையும், ஆற்றல்களையும் இணக்கப்படுத்திஇணைக்க வேண்டிய கடமை இருக்கிறது.
எனவே, இவற்றுக்கெல்லாம் பொருத்தமாக
உள்ள ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்றபெயரை, இன்றிலிருந்து ஏற்பது
என்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிஎன்ற பெயரைக் கைவிடுவது என்றும்
திருச்சியில் கூடிய ஏழாவது சிறப்புப்பொதுக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 2: வெளி மாநிலத்தவர்களின் மிகை நுழைவைத் தடுக்கக் கோரிச் சென்னையில் சிறப்பு மாநாடு!
தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை
வாய்ப்பு முதலியவற்றில் பிறமாநிலத்தவரின் ஆதிக்கம் மேலும் மேலும்
அதிகரித்து வருகிறது. இப்போக்கானது, மண்ணின் மக்களாகிய தமிழர்களைச் சொந்த
மண்ணிலேயே தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கீழ்நிலைக்குத்
தள்ளிவிடும். இதனால், மொழிவழி மாநிலம்அமைக்கப்பட்ட நோக்கமே சிதையும்.
அத்துடன், அன்றாடம் ஆயிரம் பேர்,
பல்லாயிரம் பேர் என இந்தியாவின் பிறமாநிலங்களிலிருந்து அயல் மொழி பேசும்
மக்கள், தமிழ்நாட்டில் நுழைந்துகுடியேறுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால்
விரைவில் காலம் காலமாக வாழும்தமிழர்களின், மக்கள் தொகையை விஞ்சக் கூடிய
அளவிற்கு அயல் மாநில மக்கள் தொகைஉயர்ந்துவிடும் பேரிடர் உள்ளது. அதன்பிறகு,
தமிழ்நாடு தமிழர்களின்மொழிவழித் தாயகம் என 1956 நவம்பர் 1-இல்
வடிவமைக்கப்பட்ட நோக்கம்முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். தமிழ்நாட்டிலேயே
அயல் இனத்தார்க்கு ஏவல்செய்து பிழைக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாகத் தமிழ்
மக்கள் மாற வேண்டியஅவலம் உருவாகும்.
இவ்வாறு நிகழ்ந்தால், 1956இல்
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மொழிவழி மாநிலஅமைப்புச் சட்டமே
பொருளற்றதாகிவிடும். எனவே பின்வரும் கோரிக்கைகளைநிறை-வேற்றிடுமாறு, இந்திய
அரசையும், அதை வலியுறுத்துமாறு தமிழக அரசையும், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கேட்டுக் கொள்கிறது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக