தளையிடப்பட்ட இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான இரு மனித உரிமை ஆர்வலர்களை அரசு விடுதலை செய்திருக்கிறது.
கத்தோலிகப் பாதிரியார் அருட்தந்தை பிரவீன் மகேசன், (உ)ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் கடந்த ஞாயிறன்று இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான ஐயப்பாட்டில் கைதானதாக அதிகாரிகள் கூறினர்.
அருட்தந்தை பிரவீன் மகேசன், (உ)ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு நீதிபதி உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான மனித உரிமை செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய உலக நாடுகள் வலியுறுத்தின.
இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, செயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாகத் தகவல்களைத் திரட்ட சென்றிருந்தபோது தளையிடப்பட்டனர்.
செயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக