வியாழன், 20 மார்ச், 2014

வடக்கில் இடம்பெற்ற கொடுமைகளை அரசாங்கம் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றது: ஃஅரீன்

வடக்கில் இடம்பெற்ற கொடுமைகளை அரசாங்கம் இன்றும் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றது: ஃஅரீன்

வடக்கில் இடம்பெற்ற கொடுமைகளை அரசாங்கம் இன்றும் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சிங்கள பகுதிகளிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் மோசமென்றால் வடக்கில் எவ்வாறு கையாண்டிருப்பார்கள் என ஐக்கிய தேசியக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 
செனிவா மனித உரிமையின் பேரவையில் நாம் போய் முறையிட வேண்டிய அவசியமில்லை. இலங்கையின் நிலை என்னவென்பதைகெ நாடுகள் கவனித்துக்  கொண்டிருக்கின்றன எனவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது. 
 
ஐக்கிய தேசியக்கட்சியினால்   சிரீகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃகரீன் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; 
 
அரசாங்கம் தனது மோசமான கொள்கைகளையும் அடாவடித்தனத்தினையும் கைவிடுவதாகத் தெரியவில்லை. இரதுபசுவெல சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எவ்விதத் தீர்மானங்களும் தீர்வும் எடுக்காத நிலையில் தற்போது அதேபோலொரு சம்பவமாகவே துன்னலை பிரதேச சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மக்களுக்கு அசெளகரியமான வகையில் அமைந்துள்ள தொழிற்சாலையினை அப்புறப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதைவிடுத்து மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ, தண்ணீர், தடியடி தாக்குதல் நடத்தவோ காவல்துறையினருக்கு உரிமையில்லை. 
 
அரசாங்கத்தின் கையாட்கள் நாட்டில் எதைச் செய்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது மக்களைக் கண்டிப்பதே இன்று  காவல்து றை யினரினதும் இராணுவத்தினதும் தொழிலாகிவிட்டது. இன்று இரு தரப்பு போராட்டத்திலும் அப்பாவி  காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துவிட்டார். இவை அனைத்திற்குமான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் மக்களிடையே மோதல்களை உருவாக்கி அமைதியைக் குழப்பி இறுதியில் சர்வதேச தலையீடுகளை கொண்டுவரும் செயற்பாட்டினை அரசாங்கமே செய்து வருகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக