திங்கள், 30 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் 7 மேலும் சில செய்திகள்

...
image-1329

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்

முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின்  வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு  அகவை 67.  இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை ...
image-1315

டி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார்

 குரு அழைத்ததால் இணைந்தேன் என்று  அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர்  விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து  ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம்  உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் ...
image-1310

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் 'தமிழி'' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும்  தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ ...
image-1305

தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்

  அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ...
image-1321

தமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் ...
image-1325

தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்

 தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து  கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று  நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த   ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து   சட்ட மன்றத் தேர்த்லில்  வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை  உறுப்பினர்களாகப்  பொறுப்பேற்றுக் ...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக