ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் 7 : சிறுகதை, பாடல், செய்திகள்





  அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ...

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது - தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை   அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை ...


 கொல்லப்பட்டவர்கள் பற்றிய  சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த  இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   மேலும் தமிழர் பகுதிகளை  வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் ...

   ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில்  சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார்.   நிசாமாபாத்து நகரில்சூரியநகர் பகுதியைச்  சேர்ந்த  பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார்.  ...

    10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும்  சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ...


கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் ...


  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக