செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தமிழக அரசு கடலோரக் காவல் அணியை அமைக்க!

அறியாமையா? மக்களைத் திசை  திருப்பப் பேசுகிறாரா? எனத் தெரியவி்ல்லை. ஏதோ, இந்தியப் படை தமிழக மீனவர்கள் நலனில் கருத்து செலுத்துவது போலும் இலங்கைக் கடற்படைதான்  இந்தியப்படை இன்மையால், மீனவர்களைக் கொன்று குவிப்பது போலும் கூறுகிறார்.  இந்தியப் படை மூலமே ஈழத்தில் இன அழிவு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்தியக் கடற்படையே நேரடியாக மீனவர்களை அழிப்பதற்கு இது துணை புரியும். எனவேதான், கூட்டுக்காவல் சுற்றுகூடத் தேவையில்லை என மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு கடரக் காவல் அணியை அமைத்து அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முன்வந்தால் தமிழக மீனவர்கள் காப்பாற்றப்படுவார்கள். இவ்வாறு அறிவித்தாலே தமிழக அரசு மத்திய அதிகாரத்தில் குறுக்கிடுவதாகக் கூக்குரலிட்டுத் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்கள. உண்மையிலேயே காவல் அணியைத் தமிழக அரசு அமைத்தால் மீனவர்கள் துயரங்கள் குறையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/






இராமேசுவரத்தில் இசுடாலின் பேச்சு
 

இராமேசுவரம்: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை ராணுவம், தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கும் அவலத்தை, மத்திய அரசுக்கு உணர்த்திடும் வகையில், நேற்று ராமேஸ்வரத்தில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை வகித்து ஸ்டாலின் பேசியதாவது: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கி, மீன்களை கொள்ளையடித்து, வலைகளை சேதப்படுத்தும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, பிரதமர் மன்மோன்சிங், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். மத்திய அரசும், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தியது, ஆனால், மீனவர் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. 1991-2011ல் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது, 167 முறை தாக்கியதில், 85 மீனவர்கள் இறந்தனர். 146 படகுகள் பறிமுதல் செய்தும், 746 மீனவர்கள் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் இருந்து, மீனவர்களை பாதுகாக்க, கச்சச்தீவை மீட்க வேண்டும். மேலும் தனுஷ்கோடி, மண்டபத்தில் வலுவான இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும். "டெசோ' சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம், இதையும் மீறி, மீனவர்கள் தாக்கப்பட்டால் நம்மை அர்ப்பணிக்கும் அளவில், போராட்டம் நடத்துவோம், என்றார். ராமேஸ்வரம் தி.மு.க., நகர் செயலாளர் நாசர்கான், துணைச் செயலாளர் வில்லாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாசகர் கருத்து (7)
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201304:03:15 IST 
Sivakumar Manikandan உங்க DMK மத்திய அரசுல அங்கம் வகிக்குதுல ....கொஞ்சம் இத்தாலி கார அம்மாகிட்ட சொல்லி நீங்களே செய்யலாமே?..........


Suresh - Ulsan,தென் கொரியா
19-பிப்-201302:59:35 IST 
Suresh நீங்க போராடி கிழிச்சதெல்லாம் போதும் ...... ஆதரவ வாபஸ் வாங்குவோம்னு மிரட்டல் விட்டீங்களா ஸ்டாலின் சார்??
Vettri - Coimbatore,இந்தியா
19-பிப்-201302:39:10 IST 
Vettri கட்ச தீவை தாரை வார்த்தது யார்? தற்போது மத்திய அரசில் பங்கு பெற்று இருப்பவர் யார்? உங்களுடைய இயலாமையை இப்படியா மேடை போட்டு பேசுவது?
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
19-பிப்-201301:55:37 IST 
B Sivanesan மத்திய ஆட்சியில் உங்களுக்கு பங்கு இல்லையா..
Indian from Mumbai - Mumbai,இந்தியா
19-பிப்-201301:15:26 IST 
Indian from Mumbai உங்கள் அற்பணிப்பை தான் இந்த நாடே ஏன் உலகமே அறியுமே. இலங்கை தமிழர்கள் கொல்லப்படும் பொது உங்கள் அற்பணிப்பை தான் நாங்கள் பார்த்தோமே. நீங்கள் கூறிய படி 1991-2011 வருட இழப்புகள் எல்லாம் சரி தான் இந்த 20 வருடத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தது எத்தனை வருடம். உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடந்தது எத்தனை வருடம் என்பதையும் நீங்கள் சற்று விளக்கமாக கூறமுடியுமா.
Jai - ,கனடா
19-பிப்-201300:54:24 IST 
Jai தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம் என்பதை, திரு ஸ்டாலின் அவர்கள், ராமேச்வர மக்களிடன் சொல்லி என்ன பிரயோஜனம். சென்று திரு முகவின் திமுக ஆலோசனைப்படி இயங்கும் மதிய அரசில் உள்ள திரு அந்தோணி அவர்கள் இடத்தில சொல்வது தானே முறை. சொன்னால் எங்கே செய்துவிடுவார்களோ என்ற தயக்கமா. இல்லை கடந்த பத்து ஆண்டுகளாக மதிய அரசில் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு இதைகூட செய்யவில்லையே என்ற நாணமா. தமிழக மீனவர்களுக்காக என்ன தான் செய்தீர்கள். எப்படியாவது ராமர் பாலத்தை இடிக்கவேண்டும் என்றால் முன்னாள் நிற்பார்கள் திமுகவினர். ஆனால் பத்து ஆண்டுகள், மதியில் இருந்துகொண்டு என்னதான் செய்தார்கள் தமிழக மீனவர்களுக்காக. இதற்க்கு மாற்றாக, கடலோர மாவட்டங்கள் அனைத்திலும், மீனவர்களுக்கு reserve தொகுதிகளை, தேர்தல் ஆணையம் கொண்டுவந்தால், மீனவர்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே எப்படி தீர்ப்பது என்று முடிவு செய்வார்கள். திரு முகவின் திமுக மதிய அரசை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை புரிந்திருப்பார்கள்.

sathik - london,யுனைடெட் கிங்டம்
19-பிப்-201300:06:41 IST 
sathik இதெல்லாம் நாடகம். இவர்கள் காங்கிரசுடன் கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதற்காக தான்.இந்த அறிவு எங்கே போனது இவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது. தமிழா இன்னுமா இவர்களை நம்புகிறாய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக